தமிழ்நாடு

tamil nadu

ரசிகர்களுடன் “லியோ” படம் பார்க்க வந்த லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத்

ETV Bharat / videos

ரசிகர்களுடன் லியோ பார்க்க வந்த லோகேஷ், அனிருத்! - Vettri Theatre

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 11:34 AM IST

சென்னை:இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'லியோ'. மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார்.

ரசிகர்களின் பாதுகாப்பு காரணங்கள் கருதி லியோ படத்தின் அதிகாலை காட்சிக்கு மாநில அரசு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்தது. இதனால் காலை 9 மணிக்கு தமிழகம் முழுவதும் முதல் காட்சி திரையிடப்பட்டது. இந்நிலையில், சென்னை முழுவதும் உள்ள திரையரங்குகளின் வெளியே ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 

அந்த வகையில், குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கிற்கு முன்பு ரசிகர்கள் கூட்டம் காத்துக் கொண்டிருந்தது.
ரசிகர்கள் மேளதாளங்கள் மற்றும் பாட்டாசு வெடித்து கொண்டாடாமல், படத்தை பார்ப்பதற்கு ஆர்வமுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

இதனையடுத்து, குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படக்குழுவினர் சிலர் ரசிகர்களுடன் படம் பார்ப்பதற்காக வந்தனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே விஜய்யின் லியோ திரைப்படம் இன்று வெளியாவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details