LIVE VIRAL VIDEO: கண் முன்னே மரண பயத்தை அனுபவித்த திருடன் - பெகுசராய் ககாரியா ரயில்
பீகார் மாநிலம், ககாரியாவில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சாஹேப்பூர் கமல் ரயில் நிலையம் வழியாக சென்று கொண்டிருந்த பெகுசராய் - ககாரியா ரயிலில் பயணித்த ஒருவரிடம், ஜன்னல் வழியாக கைகைளை உட்புகுத்தி செல்போனை திருடன் ஒருவன் திருட முயற்சித்துள்ளான். அப்போது அந்த நபர் திருடனின் கைகளை லாவகமாகப் பிடித்துக்கொண்டார். அப்போது ரயில் எதிர்பாராதவிதமாக புறப்பட்டது. இதனால் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் அந்த திருடனை, ரயிலில் பயணித்தவர்கள் பிடித்துச்சென்றுள்ளனர். அப்போது 'தன்னை விட்டு விடாதீர்கள்' என திருடன் கெஞ்சிய காட்சிகள் செல்போனில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST