Watch: சிவன் பாத்திரத்தில் மாட்டிக்கொண்ட குரங்கின் தலை... பின்னர் நடந்த அதிசயம்! - பாத்திரத்தில் மாட்டிக் கொண்ட குரங்கின் தலை
சத்தீஸ்கர்: தம்தாரி மாவட்டம், நகரி பகுதியில் சிவன் கோயில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான குரங்குகள் உணவு, தண்ணீர் தேடி வரும். அந்த வகையில், தண்ணீர் தேடி வந்த குட்டி குரங்கு ஒன்று சிவன் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிக்க முயன்றபோது அதன் தலை சிக்கிக் கொண்டது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவியது. தாய் குரங்கு குட்டியை மடியில் வைத்துக்கொண்டு, மரத்தில் ஏறி சுற்றித் திரிந்தது. வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் யாரும் மீட்க வரதாத நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு குரங்கின் தலையில் சிக்கியிருந்த பாத்திரம் விடுவிக்கப்பட்டு, குட்டி குரங்கு உயிர்பிழைத்தது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST