தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கடம்பூர் மலைப்பகுதி சாலையில் அதிகரிக்கும் சிறுத்தை நடமாட்டம்.. பொதுமக்கள் கவனத்துடன் செல்ல அறிவுறுத்தல்! - erode leopard video

🎬 Watch Now: Feature Video

கடம்பூர் மலைப்பகுதி சாலையில் அதிகரிக்கும் சிறுத்தை நடமாட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 11:07 AM IST

ஈரோடு:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப் பகுதியில் ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்குத் தேவையான அன்றாட பொருள்களை, மக்கள் சத்தியமங்கலத்தில் வாங்கிச் செல்வது வழக்கம். 

இந்நிலையில், ஏலஞ்சி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், சத்தியமங்கலதத்தில் இருந்து கடம்பூர் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தபோது, கடம்பூர் 5வது மைல் என்ற இடத்தில் நடுரோட்டில் சிறுத்தை ஹாயாக நடந்து சென்றுள்ளது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள், காரின் கதவை மூடிக்கொண்டு சிறுத்தை செல்வதை படம் பிடித்துள்ளனர். 

சிறுத்தை சிறிது தூரம் நடந்து சென்று பாறையின் மீது ஏறி உள்ளது. இந்த காட்சிகளை வாகன ஓட்டிகள் தற்போது இணையத்தில் பகிர்ந்து உள்ளனர். கடந்த சில நாட்களாக போன்பாறை என்ற இடத்தில் சிறுத்தை தென்பட்டது குறிப்பிடத்தக்கது. கடம்பூர் மலைப்பகுதி சாலைகளில் சிறுத்தைகள், காட்டு யானைகள் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது. இதனையடுத்து சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து இருப்பதால், வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details