நீலகிரியில் சிறுத்தை நடமாட்டம்! பொதுமக்கள் அச்சம்
நீலகிரி:நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகளை வனப்பகுதியில் பார்ப்பதை விடக் குடியிருப்பு பகுதிகளில் பார்ப்பது அதிகரித்து வருகிறது. சிறுத்தை, கரடி, யானைகள் போன்ற வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரத் துவங்கியுள்ளதால் வனத்துறையினர் கால்நடைகளை யாரும் வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும், விறகு எடுக்க யாரும் வனப் பகுதிக்குச் செல்லக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இரவு நேரங்களில் பொதுமக்கள் பாதுகாப்புடன் வெளியே சென்று வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இரவு நேரங்களில் குடியிருப்பிலிருந்து அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், குன்னூர் அருகே உள்ள பாரஸ்ட்டேல் பகுதியில் இரவு நேரங்களில் சாலையில் நடந்து சென்ற சிறுத்தையை வாகனத்தில் சென்றவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள வீடியோ பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க :காலாவதியாகாத மாத்திரைகளை தீ வைத்து எரித்த போது விபத்து; அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் மருத்துவமனையில் அனுமதி!