சீரியல் செட்டிற்குள் நுழைந்த சிறுத்தை - பதைபதைக்க வைக்கும் காட்சிகள்! - mumbai
மகாராஷ்டிரா மாநிலம் கோரேகான் மாவட்டத்தில் பிலிம் சிட்டி ஒன்று உள்ளது. இங்கு உள்ள மராத்தி சீரியலின் செட்டில் நேற்று மாலை 4 மணி அளவில் சிறுத்தை ஒன்று தனது குட்டியுடன் நுழைந்துள்ளது. சிறுத்தையைக் கண்ட சீரியல் தயாரிப்புக் குழுவினர் பெரும் அச்சத்தில் உறைந்தனர். இதனால் அந்த இடத்தை விட்டு வேகமாக வெளியேறத் தொடங்கினர்.
இந்த சம்பவம் குறித்து அனைத்திந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கத்தின் (All Indian Cine Workers Association) தலைவர் சுரேஷ் ஷியாம்லாலா குப்தா, “சீரியல் செட்டினுள் சிறுத்தை நுழைந்தபோது 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தனர். இதனால் யாருக்கேனும் ஆபத்து ஏற்பட்டிருக்கலாம்.
இது புதிதல்ல, கடந்த 10 நாட்களில் இது 4வது நிகழ்வு. ஆனால், அரசு இதுவரை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. மாநில அரசு மற்றும் வனத்துறை, பிலிம் சிட்டிக்குள் சிறுத்தைகள் நுழைவது தொடர்பான பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்” என கூறியுள்ளார். இந்த நிகழ்வு குறித்த காணொலி சமூக வலைதளங்களில்ல் வேகமாக பரவி வருகிறது.