Leo release: தேனியில் காரின் மீது அமர்ந்து சிறுவர்கள் கொண்டாட்டம்! - today latest news
Published : Oct 19, 2023, 10:42 AM IST
தேனி: செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம், லியோ. விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து உள்ளார்.
சர்ச்சைகள், படத்தின் சிறப்புக் காட்சிகள் என பல சிக்கல்களைத் தாண்டி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இப்படம் இன்று (அக்.19) தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளிலும் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் லியோ திரைப்படத்தை திரையிடும் திரையரங்க வாயில்களில் விஜய் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் பெரியகுளம் பார்வதி திரையரங்கின் வாயிலின் முன்பு விஜய் ரசிகர்கள் மேளதாளங்கள் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் ஆரவாரமாகப் பட்டாசுகளை வெடித்தும் கேக் வெட்டியும் கொண்டாடி மகிழ்ந்தனர். அதிலும், சிறுவர்கள் காரின் மீது அமர்ந்து நடனமாடினர்.