Video: ஐஸ்லாந்து எரிமலையிலிருந்து எரிமலைக்குழம்பு வெளியேறும் காட்சி - ஃபேக்ரடால்ஸ்ஃப்ஜால் மலை
ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் உள்ள ஃபேக்ரடால்ஸ்ஃப்ஜால் மலைக்கு அருகில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் ஒரு எரிமலை பிளவில் இருந்து எரிமலைக்குழம்பு வெளியேறியுள்ளது. தற்போது இதன் வீடியோ வெளியாகியுள்ளது. எரிமலைக்குழம்பு வெளியேறுவதால், அதில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள் அருகிலுள்ள கிராமத்தின் காற்றை மாசுபடுத்தும் ஆபத்து உள்ளது. மேலும் ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்காவிக் வரை இதன் பாதிப்பு பரவும் அபாயம் இருப்பதாக ஐஸ்லாந்திய வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST