கனமழையால் மூழ்கிய தரைப்பாலம் - தடுப்பு அமைத்த காவல் துறையினர் - Police cordoned off fence
தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் தொடர்மழை பெய்துவருகிறது. இதன் தாக்கம் எல்லை மாவட்டமான திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக எதிரொலித்தது. இம்மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் பாலாறு மற்றும் அதன் கிளை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் வாணியம்பாடி ஓம் சக்தி கோயில் அருகே உள்ள தரைப்பாலம் கிளையாற்றின் வெள்ளத்தால் முற்றிலுமாக மூழ்கியுள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு தரைப்பாலத்தை கடந்து செல்ல காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST