300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா - ஈரோடு
ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளியில் 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை சோழீஸ்வரசாமி கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. தொடர்ந்து ஸ்ரீ விக்னேஸ்வரா பூஜை, கோ பூஜை, மகா கணபதி ஹோமம், தன பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் செய்யப்பட்டது தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் குடம் முளைப்பாரி எடுத்து வந்து தனியார் மில்லில் வைத்தனர்.
திங்கட்கிழமை அன்று ஸ்ரீ மகா கணபதி யாகசாலை அமைத்து சிறப்பு பிரார்த்தனைகள் வழிபாடுகள் செய்யப்பட்டன. பின்னர் நேற்று யானை ஊர்வலம், குதிரை நடனம் என 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தனியார் மில்லில் இருந்து தீர்த்த குடம் எடுத்து கோவிலுக்கு சென்றனர்.
அதனைத் தொடர்ந்து இன்று குடமுழக்கு விழாவையொட்டி இன்று காலை முதலே யாகசாலை பூஜை உட்பட்ட பல்வேறு வழிபாடுகள் நடத்தப்பட்டு கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது இந்த குடமுழக்கு விழாவில் அளுக்குளி, அலிங்கியம், ஆண்டவர் மலை உள்ளிட்ட 32 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது.