தமிழ்நாடு

tamil nadu

கும்பகோணம்:சூரிய பெருமான் கோயிலில் 108 முறை சூர்ய நமஸ்காரத்துடன் சிறப்பு யோகா நிகழ்வு

ETV Bharat / videos

கும்பகோணம் சூரிய பெருமான் கோயிலில் 108 முறை சூர்ய நமஸ்காரத்துடன் சிறப்பு யோகா! - சிறப்பு யோகா நிகழ்வு

By

Published : Jun 25, 2023, 5:33 PM IST

கும்பகோணம்: நவகிரக ஸ்தலங்களில் முதன்மை தலமாகவும், சூரியனுக்குரிய பரிகாரத்தலமாகவும் விளங்குவது சூரியனார் கோயிலில் ஸ்ரீ உஷாதேவி, சாயாதேவி உடனாய சிவசூரியபெருமான் திருக்கோயில் ஆகும். இன்று அபூர்வமான பானுசப்தமி நன்நாள் அதாவது, பானு என்றால் சூரியன், சப்தமி என்றால் ஏழாம் நாள், சூரிய பகவானுக்குரிய கிழமை ஞாயிறு, எனவே ஞாயிற்றுக்கிழமை வரும் சப்தமி ததி பானுசப்தமி என அழைக்கப்பெறுகிறது.

இந்த நாளில் சூரியனை வழிபடுவதன் மூலம் தேக ஆரோக்கியம், நல்ல காரியம், ஆகியவை எளிதில் கிட்டும், மேலும்  இன்று சூரியனுக்குரிய நட்சத்திரமான 'உத்திர நட்சத்திரம்’ இணைந்து வருவதால்,  இது ஆயிரம் சூரிய கிரகண நாளில் செய்த வழிபாடு, மற்றும் தானங்கள் பலன்கள் இன்று ஒருநாள் செய்யும் வழிபாடு மூலம் பெற முடியும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இத்தகைய பானுசப்தமி நாளில், சிவ சூரியபெருமான் திருக்கோயிலில் இன்று காலை, 108 முறை சூர்ய நமஸ்காரத்துடன் கூடிய சிறப்பு யோகாசனம் நிகழ்வு நடைபெற்றது. இதில் வயது வித்தியமின்றி 10 வயது முதல் 90 வயது வரை கொண்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சூர்ய நமஸ்காரம் செய்தனர்.

இதையும் படிங்க:மழைக்காலத்துக்கு ஏற்ற உணவுகள் எவை? - ஊட்டச்சத்து நிபுணர்கள் அட்வைஸ்!

ABOUT THE AUTHOR

...view details