தமிழ்நாடு

tamil nadu

சர்வதேச சாக்லேட் தினம் சாக்லேட் உடையணிந்து குழந்தைகள் கொண்டாட்டம்.

ETV Bharat / videos

World Chocolate Day: சாக்லேட் உடையில் வலம் வந்த குழந்தைகள்.. கும்பகோணத்தில் குதூகலம்! - கார்த்திக் வித்யாலயா சர்வதேச பள்ளி

By

Published : Jul 7, 2023, 6:15 PM IST

கும்பகோணம்:ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 7-ஆம் நாள் சர்வதேச சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது, இந்த நாளை சிறப்பிக்கவும், இதனை மகிழ்ச்சியுடன் குழந்தைகள் அனைவரும் ஒருங்கிணைந்து கொண்டாடும் வகையில் கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூரில் உள்ள கார்த்திக் வித்யாலயா சர்வதேச பள்ளியில் இன்று சாக்லேட் கண்காட்சி நடைபெற்றது.

இதில் பல வகையான சாக்லேட்களை வைத்து அழகான ஓவியமாக அலங்காரித்து காட்சிப்படுத்தி அனைவரையும் கவர்ந்ததுடன் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பல்வேறு வகையான சாக்லேட்டுகள் போன்ற ஆடையை அணிந்து வந்து ஆடல், பாடல் என கலை நிகழ்ச்சிய அரங்கேற்றினர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பு சாப்பிடும் சாக்லெட்டுகளால் பலவிதமான ஓவியங்களாக அலங்காரம் செய்தும் பாரம்பரிய தின்பண்டங்களான கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், தேங்காய் மிட்டாய், தேன் மிட்டாய் உள்ளிட்ட பல்வேறு விதமான தின்பண்டங்களும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் பள்ளி குழந்தைகள் சாக்லெட் உடையணிந்தும் கழுத்திற்கு சாக்லேட் மாலை அணிந்தும் வந்திருந்தது, காண்பவர்களை பெரிதும் கவர்ந்து. பள்ளி தாளாளர் கார்த்திகேயன்  சாக்லேட் அலங்காரம் செய்து வந்த குழந்தைகளுக்கு பாராட்டு நற்சான்றிதழ்களை வழங்கி உற்சாகபடுத்தினார்.

இதையும் படிங்க :மாணவிகளோடு தரையில் அமர்ந்து புத்தகம் வாசித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!

ABOUT THE AUTHOR

...view details