தமிழ்நாடு

tamil nadu

கலை கட்டியது குலசேகரபட்டினம் தசரா திருவிழா..காளி வேடம் அணிந்து பரவசமாக ஆடிய பக்தர்கள்!

ETV Bharat / videos

குலசை தசரா திருவிழா; காளி வேடம் அணிந்து பரவசமாக ஆடிய பக்தர்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 9:59 AM IST


தூத்துக்குடி:உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா, இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஶ்ரீ முத்தாரம்மன் கோயிலில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த அக்டோபர் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வேடம் அணிந்த பக்தர்கள் குழுவாகவும், தனியாகவும் வீடு வீடாகச் சென்று காணிக்கை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், தசரா குழுவினர் காளி வேடம், அம்மன் வேடம், ராஜா வேடம், ராணி வேடம், ஆஞ்சநேயர் வேடம், குறவன் வேடம், கிருஷ்ணர் வேடம், போலீஸ் வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து இரவு பகலாக காணிக்கை பெற்று வருகின்றனர்.

இதில் தசரா குழுவினர் பல்வேறு காளி வேடமணிந்து, அம்மன் அருள் வந்து ஆக்ரோஷமாக ஆடிய சம்பவம் காண்போரை பக்தி பரவசமாக்கியது. மேலும், ஆஞ்சநேயர் வேடமனிந்த பக்தர்கள் இளநீரை அதிவேகமாக உரித்து தலையில் அடித்து உடைத்து, அதிலுள்ள இளநீரை குடித்து விட்டு பக்தர்களுக்கு இளநீர் வழங்கிய காட்சி காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது.

இந்நிலையில், தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் இன்று (அக்.24) கோயில் கடற்கரையில் வைத்து நடைபெறவுள்ளது. இந்த சூரசம்ஹாரம் நாளில், பக்தர்கள் தாங்கள் பெற்று வரும் காணிக்கைகளை கோயில் உண்டியலில் செலுத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வர்.

ABOUT THE AUTHOR

...view details