தமிழ்நாடு

tamil nadu

பொள்ளாச்சி அருகே பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்

ETV Bharat / videos

பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் - பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில்

By

Published : Feb 1, 2023, 10:22 PM IST

Updated : Feb 3, 2023, 8:39 PM IST

கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அருகே உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலின் சிறப்பு அம்சமாக ஆஞ்சநேயர் ஒரே கருவறையில் மூலவர் சமதள பரப்பில் இருப்பதும் நின்ற கோலத்தில் மூர்த்தி இருப்பதும் தமிழகத்தில் இங்கு மட்டும்தான் என்பது சிறப்பு அம்சமாக உள்ளது.

இக்கோவில் கும்பாபிஷேகம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மங்கல இசையுடன் நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து கும்பம் எழுந்தருளி திருக்கோவிலில் பவனி வந்து, பின்னர் ராஜகோபுரம், ஆஞ்சநேயர் மூலவர் கோபுரம், ராமர் பாத கோபுரம், விநாயகர் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தங்கள் தெளிக்கப்பட்ட பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஆனைமலை, பொள்ளாச்சி, கோவை, உடுமலை பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details