தமிழ்நாடு

tamil nadu

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 640 கனஅடி நீர் வெளியேற்றம்: துர்நாற்றத்துடன் காணப்படும் ரசாயன நுரைகள்

ETV Bharat / videos

Kelavarapalli Dam: கெலவரப்பள்ளி அணையிலிருந்து துர்நாற்றத்துடன் வெளியேறும் தண்ணீர்.. விவசாயிகள் வேதனை!

By

Published : May 4, 2023, 2:25 PM IST

கிருஷ்ணகிரி: கர்நாடகா நந்திமலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, வரத்தூர் ஏரி வழியாக பெங்களூரு நகரத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலந்தும், தென்பெண்ணை ஆற்றின் எல்லையோரமாக உள்ள தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுநீர் கலந்தும் தமிழ்நாட்டில் உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு ரசாயன கழிவுகளுடன் கருப்பு நிறத்து வந்து சேர்கிறது.

கர்நாடகா மாநிலத்தில் பெய்த மழை காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு இன்று விநாடிக்கு 640 கனஅடி நீர் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரமாக கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேறும் நீரில் நுரை அதிகரித்து காணப்படுகிறது.

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5 மதகுகள் வழியாக 640 கனஅடி நீர் திறந்து விடப்படும் நிலையில், ஆற்றிலிருந்து வெளியேற்றப்படுவது நீரா அல்லது நுரையா என்கிற அளவிற்கு 2 அடி உயரத்திற்கு நீரிலிருந்து நுரை பொங்கி காட்சியளிக்கிறது. துர்நாற்றத்துடன் நீர் கருப்பு நிறத்திலும், நுரை பனிக்கட்டிகளை போன்று காட்சியளிக்கிறது. குமட்டலை ஏற்படுத்தும் அளவிற்கு துர்நாற்றம் வீசுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி கர்நாடகா - தமிழ்நாடு இருமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கெலவரப்பள்ளி அணையில் ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்து சென்ற நிலையில் இதுவரை முடிவுகள் வெளியிடப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் கெலவரப்பள்ளி அணையை பார்வையிட்டு 47 இடங்களில் கழிவுநீர் கலப்பதாகவும் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையின் முழுக்கொள்ளளவான 44.28 அடிகளில் 42.97 அடிகள் நீர் சேமிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கிருஷ்ணகிரி ஆணவக்கொலை வழக்கில் சரணடைந்த இருவர் - போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details