கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு வழுக்குமரம் ஏறுதல், உரி அடித்தல் திருவிழா கோலாகலம்..இளைஞர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு - Krishna jayanthi festival in Tiruvannamalai
Published : Sep 7, 2023, 7:36 AM IST
திருவண்ணாமலை:அருணாசலேசுவரர் திருக்கோயிலின் கிரிவல பாதையில் உள்ள அடிஅண்ணாமலை கிராமத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு வழுக்குமரம் ஏறுதல் மற்றும் உரி அடித்தல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலின் கிரிவல பாதையில் உள்ள அடிஅண்ணாமலை கிராமத்தில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், 15ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நேற்று (செப். 6) காலை பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகமும், விஷேச அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, மாலையில் சிறுவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனை போன்று வேடம் அணிந்து கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் ஊர்வலமாக வந்து கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர். மேலும், விழாவை முன்னிட்டு வழுக்குமரம் ஏறுதல் மற்றும் உரி அடித்தல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. உரி அடித்தல் திருவிழாவில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். 25 அடி உயரமுள்ள வழுக்குமரத்தில் ஏரி இளைஞர்கள் உரியடித்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று பார்வையிட்டனர்.