திருச்செந்தூரில் கொங்கு பாரம்பரிய கும்மி நடனம்! - கொங்கு பாரம்பரிய கும்மி
Published : Oct 4, 2023, 9:18 AM IST
தூத்துக்குடி:முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக கருதப்படுவது, திருச்செந்தூர் முருகன் கோயில் ஆகும். மேலும் உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.
இந்நிலையில், பழனி அருகே உள்ள குப்பாயிவலசு ஊரைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கலைக் குழுவினர்கள், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்திருந்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தரிசனத்திற்குச் செல்லும் கிரி பிரகாரத்தில் கொங்கு பாரம்பரிய கலாச்சாரமான வள்ளி கும்மி நடனம் ஆடினர்.
அவர்கள் ஆடிய அந்த கொங்கு கும்மி நடனத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன்றாக இணைந்து பாட்டு பாடி நடனம் ஆடினர். மேலும், இந்த நடனத்தை கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர். தற்போது கொங்கு கும்மி நடனத்தை வளர்க்கும் விதமாக, இது போன்ற நடனங்கள் பல்வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: குமரியில் தொடரும் மழை.. பள்ளிகளுக்கு விடுமுறை - பல இடங்களில் சேதம்!