Kodaikanal Drone Video: இரவில் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த கொடைக்கானல்! - கொடைக்கானல் வீடியோ
Published : Oct 1, 2023, 1:32 PM IST
திண்டுக்கல்: தமிழகத்தில் தற்போது காலாண்டு விடுமுறை, வார இறுதி நாட்கள் மற்றும் காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறையால் மலைகளின் அரசியான கொடைக்கானலில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் நேற்று காலை முதல் மலை சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வந்த நிலையில், சுற்றுலாத்தலங்களான மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வந்த சுற்றுலாப் பயணிகள் நகர் பகுதிகள் இரவு நேரத்தில் நுழைந்ததால் ஏரி சாலை, அண்ணா சாலை, மூஞ்சிக்கல் உள்ளிட்ட பிரதான சாலைகள் முழுவதுமாகவே முடங்கின.
இந்நிலையில் இருள் சூழ்ந்த மலைப் பகுதிகளில் வாகனங்களில் எரியூட்டப்பட்ட வெளிச்சத்தை கழுகுப் பார்வை காட்சியில் ஜொலித்த மலைகளின் இளவரசி காண்போரை கண்கவரச் செய்தது. ஒவ்வொரு ஆண்டும் சீசன் மாதங்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் கூடுதல் காவல் துறையினர், தற்காலிகப் பணியாக கொடைக்கானலுக்கு மாவட்ட காவல் துறை அனுப்பி வைத்து போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.