கொடைக்கானல் மலைப்பகுதியில் பூத்துக் குலுங்கும் புருனஸ் மலர்கள் - கொடைக்கானல் புருனஸ்
திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் காலநிலைக்கு ஏற்ப பல்வேறு வகையான பூக்கள் பூத்து குலுங்கும். இந்த நிலையில் இரண்டாம் சீசனை முன்னிட்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் பூக்கும் புருனஸ் மலர்கள் தற்போது கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் பூத்துக் குலுங்கி வருகிறது. இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த வகை மலர்களை கண்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்து புகைப்படம் எடுத்தும் வருகின்றனர். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த மலர்கள் பூக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST