மூணார் மாட்டுப்பட்டி அணை திறப்பு - Maatupatty
தொடர் மழை காரணமாக கேரள மாநிலத்தில் சிறந்த சுற்றுலாத்தலமான மூணாறு மாட்டுப்பட்டி அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததுள்ளது. இதனால் அணையின் ஷட்டர் 30 செ.மீ திறக்கப்பட்டு மணிக்கு 150 கனஅடி நீர் அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் முத்திரப்புழா ஆற்றில் ஓடி கல்லருட்டி, கீழ் பெரியாறு வழியாக செல்வதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST