தமிழ்நாடு

tamil nadu

கச்சைத் தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

ETV Bharat / videos

கோலாகலமாக நடந்து முடிந்த கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா - கச்சைத் தீவு

By

Published : Mar 4, 2023, 7:33 PM IST

இலங்கை: கத்தோலிக்க புனித திருத்தலமாகிய கச்சத் தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்திர உற்சவம் நேற்று (மார்ச் 3) மாலை 4 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இந்தியா-இலங்கை பக்தர்களின் பங்கேற்பு உடன் வருடாந்த உற்சவம் கோலாகலமாக இன்று (மார்ச் 4) நடந்து முடிந்தது. 

முன்னதாக, பாதை சிலுவை ஆலயத்தை சுற்றி வலம் வரும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்த வருடாந்திர கச்சத் தீவு உற்சவத்திற்கு இலங்கை கடற்படை, இந்திய துணை தூதரகம், இலங்கை வெளிவிவகார அமைச்சகம் தரப்பில் முழுமையான ஆதரவும் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இன்று காலை 7 மணியளவில் யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டது. 

இதில் 60 நாட்டு படகுகளிலிருந்தும் 16 இழுவை மடி படகுகளிலிருந்தும் இந்தியாவிலிருந்து 2 ஆயிரத்து 100 பக்தர்கள் மற்றும் இலங்கையிலிருந்து இலங்கை கடற்படையினரின் படகுகள் மூலமும் ஏனைய தனியார் படகுகளிலிருந்தும் 2 ஆயிரத்து 800 பக்தர்கள் வருகை தந்தனர். இவர்களுடன் அதிகாரிகள், வியாபாரிகள் என 200 பேர் உள்பட மொத்தமாக 5 ஆயிரத்து 100 பேர் கச்சத் தீவு பெருநாளில் கலந்து கொண்டனர். 

இதையும் படிங்க:கைலாசாவில் வாழ விருப்பமா..? ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. நித்தியானந்தா அழைப்பு..

ABOUT THE AUTHOR

...view details