யாசின் மாலிக் தீர்ப்பு: ஆதரவாளர்கள் போராட்டம், வலதுசாரிகள் கொண்டாட்டம் - முழுவிவரம்! - காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்
ஸ்ரீநகர்: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் தீர்ப்புக்கு முன்னதாக அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள் மைசுமாவில் உள்ள அவரது வீட்டின் முன் திரண்டு யாசின் மாலிக்கை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீநகரின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. அதே வேளையில் ஜம்முவில் யாசின் மாலிக்கிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஆதரித்து வலதுசாரிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST