Karnataka Election: திருவண்ணாமலை கோயிலில் கர்நாடக அமைச்சர் அசோக் சிறப்பு பூஜை! - பாஜக வெற்றி பெற கர்நாடக அமைச்சர் பூஜை
திருவண்ணாமலை: கர்நாடகா மாநில வருவாய்த்துறை அமைச்சர் அசோக் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை சாமி தரிசனம் செய்தார். பின்னர், அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அசோக், "ஒவ்வொரு முறையில் கர்நாடக மாநில தேர்தலின் போது திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று(ஏப்ரல் 12) அண்ணாமலையாரை தரிசம் செய்தேன். கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய வேண்டிக்கொண்டேன்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "கர்நாடக மாநிலம் கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சிவக்குமாரை எதிர்த்து தன்னை வேட்பாளராக அறிவிக்க பாஜக தலைமையிடம் கேட்டுக்கொண்டேன். அதன் அடிப்படையில் என்னை வேட்பாளராக அறிவித்துள்ளனர். இந்த தொகுதியில் ஒரு போர் வீரனை போல் களமிறங்க உள்ளேன்" என்றார்.
மேலும், கர்நாடகா மாநில தேர்தலில் இரண்டு தொகுதிகளில் தான் போட்டியிடுவதாகவும், நடைபெற உள்ள தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று கர்நாடக மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாகவும் வருவாய்துறை அமைச்சர் அசோக் தெரிவித்தார்.