பாடகர் திருமூர்த்தியை அழைத்து வாழ்த்திய கமல்ஹாசன்! - கமல்
கடந்த சில நாட்களுக்கு முன், பார்வையற்ற பாடகரான திருமூர்த்தி சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பத்தல பத்தல’ பாடலைப் பாடி வெளியிட்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து இன்று(ஜூன் 22) பாடகர் திருமூர்த்தியை கமல்ஹாசன் சந்தித்து வாழ்த்தினார். அவர் முன்னரே ‘பத்தல பத்தல’ பாடலை பாடிய திருமூர்த்தியைப் பாராட்டியது மட்டுமல்லாமல் , அவரது அடுத்த திட்டம் என்ன..?, எனக் கேட்டார் கமல்ஹாசன். முறையாக இசை கற்றுக் கொள்வதே தன் திட்டமென திருமூர்த்தி கூறியதும், உடனே ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பள்ளியில் தான் சேர்த்து விடுவதாக வாக்குறுதி தந்தார், கமல் ஹாசன். இந்த இருவரும் சந்தித்துப் பேசிய காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST