வீடியோ: ஆவடி பாபு வீட்டுக்கு கமல் ஹாசன் நேரில் சென்று ஆறுதல் - கமல்ஹாசன் லேட்டஸ்ட் செய்திகள்
மக்கள் நீதி மய்யத்தில் திருவள்ளூர் தென்கிழக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்தவர், முஸ்டாக் அலி என்கிற ஆவடி பாபு. இவர் நேற்றைய முன்தினம் (மார்ச் 2) மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் இன்று (மார்ச் 4) ஆவடி பருத்திபட்டில் உள்ள பாபுவின் வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது கமல் ஹாசன் உடன், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். முன்னதாக ஆவடி பாபு உயிரிழந்த நாளில், கமல் ஹாசன் திரைப்பட படப்பிடிப்பு காரணமாக ஹைதராபாத்தில் இருந்த நிலையில் அன்றைய தினம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, “மக்கள் நீதி மய்யத்தின் திருவள்ளூர் தென்கிழக்கு மாவட்டச் செயலாளர் முஸ்டாக் அலி என்கிற ஆவடி பாபு உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மக்கள் பணியில் மிகுந்த ஆர்வமுடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட களப்பணியாளரை இழந்துவிட்டோம். அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என தனது அதிகாரப்பூரவ ட்விட்டர் பக்கத்தில் கமல் ஹாசன் தெரிவித்திருந்தார்.