மயிலாடுதுறையில் களைகட்டிய கடைமுக தீர்த்தவாரி - மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெறும் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி துலாக்கட்ட காவிரியில் நடைபெற்றது. இதையொட்டி, வதான்யேஸ்வரர் கோயில், ஐயாரப்பர் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி திருவீதி உலாவாக காவிரியின் இரண்டு கரைகளிலும் எழுந்தருள செய்யப்பட்டு, காவிரியில் அஸ்ரதேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. தருமபுரம் ஆதீனகர்த்தர் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST