ஜெயலலிதாவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தாதது ஏன்... ஓபிஎஸ்சை குறிப்பிட்டு நீதிபதி ஆறுமுகசாமியின் பதில் - எய்ம்ஸ் அறிக்கை
ஜெயலலிதாவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தாதது ஏன்? என்ற கேள்விக்கு நீதிபதி ஆறுமுகசாமியின் பதில், "வீட்டிலுருந்து ஜெயலலிதாவை மருத்துவனை அழைத்து வரும்பொழுது சந்தேகப்படும் அளவிற்கு ஒன்றுமில்லை. அதனால் வீட்டிற்கு சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை. ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும் உணவு பழக்கங்கள், அவரை யார் எல்லாம் கவனித்து கொண்டார்கள் என்பதை எல்லாம் விசாரித்தோம். இந்த அறிக்கையில் நான் எழுதியதை விட, சாட்சியங்களை தான் அதிகமாக எழுதி உள்ளேன். ஓபிஎஸ்யின் வாக்குமூலம் உபயோகமாக இருந்தது. நேற்று எய்ம்ஸ் வெளியிட்ட அறிக்கையால் எனக்கு நிறைய சிந்தனைகள் தோன்றின. அவையெல்லாம் இணைந்து இன்று அறிக்கையை நிறைவு செய்தேன்" எனத் தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST