வீடியோ: திருச்சி நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி - ஸ்ரீரங்கம்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. நேற்று (ஜனவரி 19) நடந்த இந்த போட்டியை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் வருவாய் துறையினர் கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகளும், 450 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளுக்கும் இருசக்கர வாகனம், சைக்கிள், தங்க காசு, வெள்ளி காசு, ப்ரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.