தமிழ்நாடு

tamil nadu

மதுபோதையில் அநாகரிகமாக புகை பிடித்து போலீசார் முகத்திற்கு நேராக ஊதிய நபரிடம் விசாரணை

ETV Bharat / videos

மதுபோதையில் அநாகரிகமாக புகைப்பிடித்து போலீசார் முகத்திற்கு நேராக ஊதிய நபரிடம் விசாரணை! - போலீசாரிடம் அநாகரீகமாக நடந்த நபர்

By

Published : Mar 29, 2023, 8:13 PM IST

சென்னை: கே.கே.நகரில் நேற்று இரவு உதவி ஆய்வாளர் முனுசாமி தலைமையில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் 3 பேர் காரில் அமர்ந்து மது அருந்திக்கொண்டு, கூச்சலிட்டபடி பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. 

சம்பவ இடத்துக்குச் சென்ற உதவி ஆய்வாளர் முனுசாமி அந்த இளைஞர்களிடம் விசாரித்தபோது, ஒருவர் மரியாதை குறைவாக புகை பிடித்துக்கொண்டு புகையை முகத்திற்கு நேராக ஊதியுள்ளார்.

உதவி ஆய்வாளர் முனுசாமி , அவரை லேசாக தள்ளியபோது அந்த நபர் மீண்டும் வந்து, உதவி ஆய்வாளரின் முகத்தில் புகையை விட்டுள்ளார். Breathing Analayzer மூலம் அவரை பரிசோதனை செய்து, குடிபோதையில் இருப்பதை அறிந்து கொண்டு அவரிடம் விசாரணை செய்தனர். முதற்கட்ட விசாரணையில் உதவி ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்ட நபர், விஷ்ணு எனத் தெரியவந்தது. 

மேலும் அவர்கள் பயன்படுத்திய கார் பதிவெண்ணை வைத்து விசாரணை செய்ததில் அந்த கார் சோழமண்டல பைனான்ஸ் பெயரில் இருப்பதும் தெரியவந்துள்ளது. போலீசார் அவரது பின்னணி குறித்தும், உடன் வந்தவர்கள் குறித்தும் விசாரித்து வரும் நிலையில் தற்போது விஷ்ணு வழக்கறிஞர்கள் உதவியோடு காவல்நிலையத்தில் ஆஜராகி இருப்பதாகவும், அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். விஷ்ணு பிரபல சினிமா தயாரிப்பாளரின் மகன் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நெல் கழிவுகளை மறுசுழற்சி செய்து சிறப்பு மின்தேக்கிகளை தயாரிக்கும் சென்னை ஐஐடி!

ABOUT THE AUTHOR

...view details