மலையகத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன? - கோவையில் மாநாடு அக்.22ல் மாநாடு - coimbatore district news
Published : Oct 20, 2023, 5:11 PM IST
கோயம்புத்தூர்:தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்களுக்கான இயக்கம் சார்பில், கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கந்தையா பேசியதாவது, "வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.22) 'மலையகம் 200' என்கிற பன்னாட்டு மாநாடு கோவையில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டின் கோரிக்கையாக, தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்கள் குறித்து தமிழக அரசு ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக 95 முகாம்களில் உள்ள நாடற்ற தமிழர்களாக இருக்கும் மக்களைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டும். மேலும் அம்மக்கள் இந்த நாட்டில் இருக்க குடியுரிமை கொடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மலையகத் தமிழர்கள் எதிர்க்கொள்ளும் நில உரிமை, வீட்டு உரிமை போன்ற பிரச்னைகளை பேசும் பொருளாக மாற்ற இந்த மாநாட்டை பயன்படுத்த உள்ளதாகவும், அம்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஒரு மலரும், அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நூலாக வெளியிட உள்ளோம்" என்று அவர் கூறினார்.