தமிழ்நாடு

tamil nadu

கீழே தவற விட்டதால் பிறந்த குழந்தை உயிரிழப்பா?

ETV Bharat / videos

கீழே தவற விட்டதால் பிறந்த குழந்தை உயிரிழப்பா?: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

By

Published : Mar 16, 2023, 9:53 PM IST

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிளேஸ் பாளையம் அல்லிக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர்கள், விஜயன் - சந்தியா தம்பதி. சந்தியாவுக்கு பிரசவம் பார்ப்பதற்காக,  கடந்த மார்ச் 5ஆம் தேதி அன்று திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலச்சிறப்பு நல கட்டடத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 8ஆம் தேதி அவருக்கு ஆண் குழந்தைப் பிறந்துள்ளது. 

ஆனால், இன்று சந்தியாவுக்கு பிறந்த குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி சந்தியாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக சந்தியா கூறுகையில், “எனது பிரசவ நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அலட்சியப் போக்குடன் செயல்பட்டனர். எனது குழந்தை பிறந்தபோது பிரசவ அறையில் இருந்த செவிலியர்‌, குழந்தையை கீழே தவறவிட்டார். 

இதனால் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 6 நாள் சிகிச்சைக்குப் பிறகு இன்று குழந்தை இறந்துவிட்டதாக எங்களிடம் மருத்துவர்கள் குழந்தையை ஒப்படைத்தனர்” எனக் கூறியுள்ளார். இதனிடையே இது குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்த குழந்தையின் உறவினர்களுடன் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.  

ABOUT THE AUTHOR

...view details