தமிழ்நாடு

tamil nadu

அகில இந்திய கூடைப் பந்து போட்டியில் இந்திய கப்பல் படை அணி சுழற்கோப்பையை வென்றது.

ETV Bharat / videos

அகில இந்திய கூடைப் பந்து போட்டி.. இந்திய கப்பல் படை அணி சாம்பியன்! - Mantib Singh

By

Published : May 22, 2023, 10:55 AM IST

தேனி மாவட்டம்: பெரியகுளம் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய சிதம்பர சூரிய நாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 62 ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப் பந்தாட்டப் போட்டிகள் கடந்த மே 15ஆம் தேதி துவங்கி கடந்த ஏழு நாட்களாக நாக் அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் போட்டிகள் நடைபெற்றன.

லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது. சுழற்கோப்பைக்கான இறுதிப் போட்டியில் இந்திய கப்பல் படை லோனாவாலா அணியும், கஸ்டம்ஸ் புனே அணியும் மோதிக் கொண்டன. போட்டியில் இந்திய கப்பல் படை லோனாவாலா அணி 92க்கு 86 என்ற புள்ளிகள் அடிப்படையில் கஸ்டம்ஸ் அணியை வீழ்த்தி சுழற்கோப்பையை வென்றது. 

மேலும் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் இந்திய விமானப் படை டெல்லி அணியும், நான்காம் இடத்தை பேங்க் ஆப் பரோடா பெங்களூரு அணியும் பிடித்தது. இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற இந்திய கப்பல் படை லோனாவாலா அணிக்கு சுழற்கோப்பை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்பட்டது. 

மேலும் இரண்டாம் இடம் பிடித்த கஸ்டம்ஸ் புனே அணிக்கு, கோப்பை மட்டும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. இதில் தொடர்ச்சியாக அதிகப் புள்ளிகளை சேர்த்த சிறந்த விளையாட்டு வீரராக தேர்வு செய்யப்பட்ட இந்திய கப்பல் படை லோனாவாலா அணி வீரரான மந்திப் சிங்கிற்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. 

இதையும் படிங்க:RCB vs GT: இ சாலா கப் நம்தே? இந்த ஆண்டும் கோட்டை விட்ட பெங்களூரு! கோலியின் சதம் வீண்!

ABOUT THE AUTHOR

...view details