தமிழ்நாடு

tamil nadu

சென்னை வந்தடைந்த இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

ETV Bharat / videos

சென்னை வந்தடைந்த இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு - 3rd odi

By

Published : Mar 20, 2023, 10:39 PM IST

சென்னை: இந்தியா, ஆஸ்திரேலியா இடையே 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரும் 22ஆம் தேதி புதன்கிழமை பகல் இரவு ஆட்டமாக சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. அந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளைச் சேர்ந்த வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் உட்பட சுமார் 70 பேர், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து சொகுசு பஸ்கள் மூலம் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹோட்டல் லீலா பேலஸுக்கும், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வீரர்கள், கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலுக்கும் சென்றனர்.

முன்னதாக இன்று மதியம் இந்திய நட்சத்திர வீரர் விராத் கோலி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணியும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இரு அணியும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்க உள்ளதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என சென்னை ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details