தமிழ்நாடு

tamil nadu

அரசு நிதி உதவி பெறும் பள்ளியை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்ட பொதுமக்கள்

ETV Bharat / videos

அரசு நிதி உதவி பெறும் பள்ளியை மூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திரண்ட பொதுமக்கள்

By

Published : May 1, 2023, 2:53 PM IST

தென்காசி:இலத்தூர் பகுதியில் லட்சுமி ஹரிஹர உயர்நிலைப்பள்ளி என்ற ஒரு பழமையான பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அரசு நிதி உதவிபெறும் இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வந்த நிலையில் இந்தப் பள்ளியானது வருகின்ற கல்வி ஆண்டு முதல் மூடப்படுவதாகவும், இந்தப் பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளை அவர்களது பெற்றோர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கும் படி இந்த பள்ளி நிர்வாகம் சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த விளம்பரத்தைப் பார்த்த அந்தப் பகுதி பொதுமக்கள் தாங்கள் இத்தனை ஆண்டுகளாக படித்து வந்த பள்ளியை ஏன் மூடுகிறீர்கள்? தற்போது இந்தப் பள்ளியில் 140க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், தற்போது இந்தப் பள்ளியை மூடுவதால் இந்தப் பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் வெகு தொலைவில் சென்று கல்வி கற்க வேண்டிய சூழல் நிலவ வாய்ப்புள்ளது.

ஆகையால், பள்ளியை மூடும் முடிவை அந்த பள்ளியின் நிர்வாகம் கைவிட வேண்டும் எனக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பள்ளியின் முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மக்களின் கோரிக்கையை பள்ளி நிர்வாகத்திடம் எடுத்துரைப்பதாகக் கூறினர். அதனைத் தொடர்ந்து, பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முயன்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details