தமிழ்நாடு

tamil nadu

குடிமகன்களை கோவப்படுத்திய சூப்பர்வைசர்! பாட்டிலுக்கு ரூ. 10 அதிகம் கேட்ட வீடியோ வெளியாகி வைரல்

ETV Bharat / videos

பாட்டிலுக்கு மேல ரூ.10 அதிகம் - டாஸ்மாக் சூப்பர்வைசர் வீடியோ வைரல் - wine shop news

By

Published : Jun 1, 2023, 8:09 PM IST

திண்டுக்கல்:தர்மத்துப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள கொரலப்பட்டியில், 3303 என்ற அரசு மதுபான கடை உள்ளது. இக்கடையில் சூப்பர்வைசராக பூமிராஜ் என்பவர் பணி செய்து வருகிறார். இந்நிலையில் இன்று (ஜூன் 1) தர்மத்துப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் உள்ள குடிமகன்கள், மதுபான கடை திறந்தவுடன் மதுபானங்களை வாங்குவதற்காக வந்துள்ளனர். 

அப்போது சூப்பர்வைசர் பூமிராஜ், அரசு நிர்ணயித்த விலையை விட பத்து ரூபாய் கூடுதலாக குடிமகன்களிடம் தொடர்ந்து வாங்கி வந்துள்ளார். அதனை தொடர்ந்து பத்து ரூபாய் கூடுதலாக வாங்கக் கூடாது என அரசு அறிவித்துள்ளது. பின் எதற்காக வாங்குகிறீர்கள் என்று குடிமகன்கள் கேட்டுள்ளனர். 

அப்பொழுது மதுபான பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாகத் தான் விற்பனை செய்வேன் என்றும் யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக்கொள் என்று சூப்பர் வைசர் பூமிராஜ் மிரட்யும் அதேநேரத்தில் குடிமகன்களை ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, மதுபான கடையில் தனி நபர்களை பணியில் அமர்த்தி அவர்கள் மூலம் கேள்வி கேட்கும் குடிமகன்களை ஆபாசமாக திட்டுவதும் எங்கு வேண்டுமானாலும் சொல்லுங்கள் என்று மிரட்டுவதும் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் குடிமகன்கள், நாங்கள் வாங்கிய பாட்டிலுக்கு உரிய ரசீது வழங்குங்கள் என்று கேட்ட பொழுது கடையின் சூப்பர்வைசர் பூமிராஜ் ரசீது ஒன்றை வழங்கியுள்ளார். அதில் எவ்வளவு தெளிவாக இருக்க வேண்டுமோ அவ்வளவு தெளிவாக யாருக்கும் புரியாத அளவிற்கு ஏமாற்று ரசீதை எழுதிக் கொடுத்துள்ளதாக குடிமகன்கள் கூறுகின்றனர் .  

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடைகளில் கூடுதலாக பத்து ரூபாய் பாட்டிலுக்கு விற்பனை செய்வதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேட்டும் அதைத் தொடர்ந்து செய்தியும் வெளியிட்டனர். இந்நிலையில் அரசு மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு விற்றால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அனைத்தையும் பொருட்படுத்தாமல் பத்து ரூபாய் கூடுதல் விலைக்கு சூப்பர்வைசர் விற்பனை செய்து குடிமகன்களை மிரட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details