Coimbatore: காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கல்வித்துறை அலுவலர்கள்! - Coimbatore news
கோயம்புத்தூர்:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்குள் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் அடிப்படை பணியாளர்கள் முதல் அமைச்சுப் பணியாளர்கள் வரை உள்ள ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் எனவும்,
ஆய்வக உதவியாளர் பணியிடத்தில் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணியிட மாறுதல் கேட்கும்போது பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்றும்; அனைத்து அலுவலகங்களிலும் பிரிவு எழுத்தர்கள் சுயமாக சுதந்திரமாக பணியாற்றுவதை உறுதிப்படுத்திட வேண்டும் எனவும், மாதம் ஒரு நாள் மாவட்ட அளவில், மாவட்ட கல்வி அலுவலர் ஊழியர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற வேண்டும் ஆகிய 4 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரக்கூடிய அருண்குமார் அமைச்சு பணியாளர்களுக்கான எதிரான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவரை இட மாற்றம் செய்யவும் வலியுறுத்தப்பட்டது.
அவர்களுடன் காவல்துறையினர், கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.