தமிழ்நாடு

tamil nadu

கோவையில் இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை

ETV Bharat / videos

கோவையில் இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை; வீடியோ வைரல்!! - wild elephant videos

By

Published : Jul 1, 2023, 3:53 PM IST

கோவை:தடாகம், பெரிய தடாகம், கணுவாய், மாங்கரை, பன்னிமடை, தொண்டாமுத்தூர், ஆகியப் பகுதிகளில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் நுழைகின்றன. யானைகள் ஊருக்குள் நுழைந்து விளை நிலத்தை சேதப்படுத்தி சில சமயங்களில் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களையும் சேதப்படுத்திச் செல்கின்றன. 

இந்நிலையில் நேற்று நள்ளிரவு தடாகம் சாலை, திருவள்ளுவர் நகர் ஊருக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை ஒருவரது வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருளை எடுக்க முற்பட்டுள்ளது. ஆனால், அந்த இடம் மிகவும் குறுகலாக இருந்ததால் யானையால் நுழைய முடியவில்லை. இதனிடைய வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை சேதப்படுத்தியது. இதில் அவர்களது வீட்டின் ஓடுகள் சேதமடைந்தன. 

இதனிடையே அருகில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பியதைத் தொடர்ந்து யானை அங்கிருந்து சென்றது. பின்னர் அருகில் உள்ள ஒருவரது வீட்டின் தொட்டியில் தண்ணீரை குடித்துச் சென்றுள்ளது. பின்னர் வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். தற்போழுது இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

காட்டு யானைகள் அடிக்கடி இப்பகுதியில் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருவதால் வனத்துறையினர் இரவு நேரங்களில் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டு, யானைகள் ஊருக்குள் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே போல், இந்த ஊரில் அனைத்து தெருக்களிலும் பழுதடைந்த தெரு விளக்குகளையும் சரி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கோவை ஒண்டிப்புதூர் நுண்ணுயிர் உரக்கிடங்கில் தீ விபத்து: காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details