Video - வத்தலக்குண்டில் புனித சந்தன மாதா ஆலய திருவிழா நிறைவு!
திண்டுக்கல்மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் சிறப்பு வாய்ந்த புனித சந்தன மாதா ஆலயம் இயங்கி வருகிறது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் சுமார் 9 நாட்கள் திருவிழா நடைபெறும். அதுபோல இந்த ஆண்டும் இந்த திருவிழா துவங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தற்போது இந்த திருவிழாவின் கடைசி நாளான நேற்று இரவு(ஜூலை 25) புனித சந்தன மாதா சிலையுடன் கொடிய மின் அலங்கார தேர்பவனி ஊர்வலம் நடைபெற்றது.
தேர் பவனியை அருட்தந்தை பால்ராஜ் புனித நீர் தெளித்து துவக்கி வைத்தார். மேலும் தேர் பவனியின்போது வான தூதர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வின்போது இளைஞர்கள், குழந்தைகள் என அனைவரும் உற்சாகமாக ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஊர்வலத்தில் பங்கேற்றனர். மேலும் வத்தலக்குண்டு நகரின் முக்கிய வீதியில் சென்ற ஊர்வலம் மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.