தமிழ்நாடு

tamil nadu

நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் ஆர்பரித்து கொட்டும் நீர்

ETV Bharat / videos

நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்! - Hogenakkal main falls

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 12:54 PM IST

தருமபுரி:காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (நவ.8) நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால், அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கடந்த இரு நாட்களாக தமிழக - கர்நாடக காவிரி கரையோரப் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்து, 8 ஆயிரம் கன அடியாக உயர்ந்து உள்ளது. தண்ணீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, சீனி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

சென்ற வாரத்தில் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடிக்கும் குறைவாக இருந்த நிலையில், தற்போது நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்திருப்பது ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details