தமிழ்நாடு

tamil nadu

திருப்பூரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது

ETV Bharat / videos

திருப்பூரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது! - hindu munnani leader

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 12:12 PM IST

திருப்பூர்: தமிழகம் முழுவதும் இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் இந்து ஆதரவாளர்கள் மீது காவல்துறை பொய் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாகவும், சனாதனம் குறித்து இந்துக்கள் மனம் புண்படும் படி பேசிய, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. 

ஆனால், எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில், இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணி ஆதரவாளர்கள் மீது மட்டும் காவல்துறையினர் பழிவாங்கும் நோக்கத்துடன் கைது நடவடிக்கை மேற்கொள்வதாகக் குற்றம் சாட்டி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பிய நிலையில், அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details