சுருளி அருவியில் கூட்டம் கூட்டமாக நடமாடும் காட்டு யானைகள்... குளிக்கத்தடை விதித்த வனத்துறையினர் - herd of elephants
தேனி: கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. இது தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்த சுருளி அருவிக்கு தமிழ்நாடு மட்டும் இன்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் நீராடுவதற்கு வந்து செல்வது வழக்கம்.
கடந்த இரண்டு மாதத்தில் சுருளி அருவி பகுதியில் அடிக்கடி யானைகள் நடமாட்டம் காணப்பட்டதன் காரணமாக வனத்துறையினர் அப்பகுதிக்கு மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்குத் தடை விதித்து உத்தரவிட்டனர். தடை உத்தரவு நீடித்ததால் மக்கள் மத்தியில் யானை நடமாட்டம் உண்மைதானா என்ற கேள்வி நிலவியுள்ளது.
இந்நிலையில் தற்போது வனத்துறையினர் சுருளி அருவி பகுதியில் யானைகள் கூட்டமாக நடமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ மக்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் மக்கள் மத்தியில் இருந்த யானைகளின் நடமாட்டம் உண்மைதானா என்ற கேள்விகளுக்குப் பதிலாக அமைந்தது. இதனையடுத்து சுருளி அருவி பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதால், சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடை தொடர்கிறது என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.