கோடை விடுமுறை - கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்! - summer holidays
திண்டுக்கல்: கோடையின் வெப்பத்தில் இருந்து விடுபட மக்கள் குளுமையான இடங்களைத் தேடி ஓடுவது வழக்கம். அந்த வகையில் கோடை விடுமுறையை முன்னிட்டு தற்போது கொடைக்கானல் மலைப் பகுதியில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இங்கு வரும் பயணிகளின் பிரதான சுற்றுலா இடங்களான மோயர் சதுக்கம், குணா குகை, ஃபைன் மரக் காடுகள், தூண் பாறை உள்ளிட்ட இடங்களைக் கண்டும், ரசித்தும் புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர். மேலும் கோடை விடுமுறையைக் கொண்டாட வந்த கொடைக்கானலில் தொடர்ச்சியாக சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவதால், கொடைக்கானல் கடும் போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்து வருகிறது.
மேலும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டுச் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டினர். மேலும் முறையாக வாகன நிறுத்தம் இல்லாமல் இருப்பதால், இந்தப் பிரச்னை ஏற்படுவதாக பயணிகள் தெரிவித்து வருகின்றனர். எனவே, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் போதிய வாகன நிறுத்தம் ஏற்படுத்தித் தர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.