தமிழ்நாடு

tamil nadu

தருமபுரியில் கடும் பனிப்பொழிவு

ETV Bharat / videos

தருமபுரியில் கடும் பனிப்பொழிவு.. வாகன ஓட்டிகள் அவதி! - mist in dharmapuri

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 11:05 AM IST

Updated : Dec 7, 2023, 2:44 PM IST

தருமபுரி:தருமபுரியில் இன்று (டிச.07) அதிகாலை முதல் கடுமையான மூடுபனி நிலவி வருவதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான மூடுபனி மற்றும் குளிர் நிலவி வருகிறது. அதேபோல், பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், முன்னால் செல்லும் ஆட்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு உள்ளதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயுள்ளனர்.

மேலும் அதியமான் கோட்டை, தொப்பூர், நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதியில் அதிகாலை தொடங்கிய பனிப்பொழிவு, காலை 8 மணியைக் கடந்தும் பனி மூட்டம் குறையாமல் இருந்தது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.

தமிழ் மாதமான கார்த்திகை மாதம் தொடங்கி, மாசி மாதம் என 4 மாதங்கள் வரை பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவது வழக்கம். அந்த வகையில், கார்த்திகை மாதத்தில் இன்று அதிக அளவிலான பனிப்பொழிவு நிலவியது. தற்பொழுது நல்லம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளின் சீதோஷ்ன நிலையானது ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகள் போன்று உள்ளது. இந்த கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர்.

Last Updated : Dec 7, 2023, 2:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details