எழில்கொஞ்சும் புதுவெள்ளை மழையில் நனைந்த பத்ரிநாத் திருக்கோயில் - பத்ரிநாத் கோயிலில் கடும் பனிப்பொழிவு
டேராடூன்(உத்தரகாண்ட்): உலகப் புகழ்பெற்ற பத்ரிநாத் கோயிலில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பத்ரிநாத் தாமில் பனிப்பொழிவு காரணமாக சுற்றுலாப்பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அதேபோல உத்ரகாசி, சாமோலி மற்றும் பித்தோராகர் மாவட்டங்களிலும் பனிப்பொழிவு கடுமையாக உள்ளது. வரும் நவ.17,18ஆகிய தேதிகளிலும் உத்ரகாண்ட் மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு மேலும் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST