மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை; குற்றால அருவியில் குளிக்கத் தடை! - thenkasi
தென்காசி: நேற்று நள்ளிரவு முதல் தென்காசி மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பாதுகாப்புக் காரணங்கள் கருதி குற்றாலம் மற்றும் பழைய குற்றாலம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST