தேனியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை; மரங்கள், மின்கம்பங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு! - தேனி கனமழை
தேனி: பெரியகுளம் அருகே உள்ள அருகே லட்சுமிபுரம் பகுதியில் நேற்று மாலை ஆறு மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சூறைக்காற்று காரணமாக லட்சுமிபுரம் முதல் தேனி மாவட்ட நீதிமன்றம் வரை சாலை ஓரங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட நூற்றாண்டுகள் பழமையான மரங்களும், மின்கம்பங்களும் உள்ளன. அவை முறிந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் முறிந்து விழுந்த மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் சாலை ஓரங்களில் உள்ள கடைகள், வீடுகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நூற்றாண்டுகள் பழமையான ராட்சத மரங்கள் சாலையின் நடுவே விழுந்துள்ளதால் பெரியகுளத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வாகனங்கள் பைபாஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
எனவே, முறிந்து விழுந்த மின்கம்பங்களால் லட்சுமிபுரம் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டு நெடுஞ்சாலைத்துறையினர், மற்றும் வருவாய்த் துறையினர் சாலைப் பகுதியில் உள்ள மரங்களை, அறுவை இயந்திரங்கள் மூலம் அகற்றியும், ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரவு நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால் லட்சுமிபுரம் பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
இதையும் படிங்க:கும்பக்கரை அருவிக்கு சீரான நீர்வரத்து! சுற்றுலாப் பயணிகள் கொண்டாட்டம்!