வேலூரில் பெய்த பலத்த மழையால் பறிபோன 3 உயிர்கள் - வேலூர் மாவட்ட செய்தி
வேலூரில் பெய்த பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்த மூன்று பசுக்களும், ஒரு கன்றுக்குட்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. வேலூரில் நேற்றைய முன்தினம் (ஜூன் 9) மாலை சூறைக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.
சுமார் ஒன்றரை மணிநேரம் பெய்த கனமழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன், மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டன. அதிலும், சில இடங்களில் பலத்த மழையுடன் ஆலங்கட்டி மழையும் பெய்தது. அதேநேரம், பலத்த காற்றுடன் கூடிய கனமழை காரணமாக சத்துவாச்சாரி, அன்புநகர் ஆகிய பகுதிகளில் மின்சார ஒயர் அறுந்து விழுந்து கிடந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 10) காலை மேய்ச்சலுக்கு சென்ற மூன்று பசு மாடுகள்ம் மற்றும் ஒரு கன்றுக்குட்டி ஆகியவை அறுந்து கிடந்த அந்த ஒயரை மிதித்ததில் உடலில் மின்சாரம் பாய்ந்து பசுக்களும் கன்றுக்குட்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
பின்னர், இது குறித்து தகவல் அறிந்த மின்சார ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சத்துவாச்சாரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.