வைரல் வீடியோ: மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்த கலைஞர் - Heart attack
கர்நாடக மாநிலத்தில் குருவப்ப பேயாரு (58) என்பவர் யக்ஷகானா எனும் மேடை நாடகங்களில் நடித்து வருகிறார். மங்களூரில் கோயில் ஒன்றில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, குருவப்பா பேயாருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, மேடையில் இருந்து நேற்று (டிச. 22) கீழே விழுந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக மங்களூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவர் மேடையில் இருந்து கீழே விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST