வேலூர் பி.எஸ்.எஃப் வீரர் பெங்களூருவில் உயிரிழப்பு: துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி! - துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி
Published : Oct 30, 2023, 9:45 PM IST
வேலூர்:கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சாலை விபத்தில் உயிரிழந்த, வேலூரைச் சேர்ந்த எல்லை பாதுகாப்புப் படை வீரரின் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
வேலூரை அடுத்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்தவர் சுதாகர்(41). இவர் கர்நாடகாவில் உள்ள எஸ்டிசி பட்டாலியனில் எல்லை பாதுகாப்பு படை வீரராக வேலை செய்து வந்தார். கடந்த அக்.28 ஆம் தேதி சனிக்கிழமை அன்று சாலை விபத்தில் சுதாகர் உயிரிழந்ததை அடுத்து, அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை (அக்.29) அலமேலுமங்காபுரம் கொண்டுவரப்பட்டது. அப்போது சுதாகரின் குடும்பத்தினர், சுதாகரின் உடலைக் கண்டு அழும் காட்சிகள் காண்போரை கண்கலங்கச் செய்தது.
சாலை விபத்தில் உயிரிழந்த சுதாகரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து, திங்கட்கிழமை (அக்.30) காலை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மயானத்தில் சுதாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக சுதாகரின் உடலுக்கு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 16 குண்டுகள் முழுங்க இறுதி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க:ரொம்ப நேரம் உட்கார்ந்து வேல பார்த்தா பக்கவாதம் வருமா?... நிபுணர்கள் சொல்வது என்ன?