தமிழ்நாடு

tamil nadu

கல்லறைத் திருவிழா

ETV Bharat / videos

ராணிப்பேட்டையில் கல்லறைத் திருவிழா.. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை! - கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 1:46 PM IST

ராணிப்பேட்டைமாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திற்கு உட்பட்ட கல்லறைத் தோட்டத்தில் மரித்த ஆத்மாக்கள் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. 

மேலும் கல்லறைத் தோட்டத்தில் கல்லறைத் திருநாள் நிகழ்வு பங்குதந்தை லியோ மரிய ஜோசப் தலைமையில் நடைபெற்றது. இந்த கல்லறைத் திருநாள் விழாவில் அருட்தந்தையர்கள் ரோச், பெர்க்மான்ஸ், சாமிநாதன், வெஸ்லி, ஆகியோர் சிறப்பு திருப்பலி பூஜை மற்றும் ஜெப பாடல்களை நடத்தினர். 

இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பங்களில் உயிரிழந்தவர்கள் மற்றும் மூதாதையர்களின் உறவினர்களின் கல்லறைகளுக்குச் சென்று பல்வேறு வகையான பூக்களைக் கொண்டு அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

இந்த கல்லறைத் திருவிழாவில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து அவரைக்கரை, கொண்ட குப்பம், வாலாஜா, அணைக்கட்டு, அம்மூர், லாலாபேட்டை, பெல், போன்ற பல இடங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தங்களின் முன்னோர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை வழிபாட்டில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details